60 வயது கடந்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்ட நெகிழ்ச்சி தருணம்

திருவள்ளூரில் 90 வயது கடந்த ஆசிரியர்கள் உடன் 60 வயது கடந்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து பள்ளிப் பருவ பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
திருவள்ளூரில் 90 வயது கடந்த ஆசிரியர்கள் உடன் 60 வயது கடந்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து பள்ளிப் பருவ பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூரில் உள்ள டி.ஆர்.பி.சி.சி.சி பள்ளியில் 1968-1974 ஆண்டுகளில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி திருவள்ளூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 90 வயதிற்கு மேல் கடந்த ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்கள் 60 வயதைக் கடந்த முன்னாள் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் முன்னால் மாணவர்கள் தங்கள் பள்ளிப் பருவத்தில் நடந்த பழைய நினைவுகளும் தங்களது குடும்ப விவரத்தை பற்றி பகிர்ந்து கொண்டனர். தள்ளாத வயதிலும் மாணவர்களின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆவலுடன் வருகை தந்து பங்கேற்றுக் கொண்டனர். பழைய நினைவுகளை கண்டு ஆசிரியர் ஒருவர் மேடையில் கண்களங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கல்வியில் தங்களை உயர்த்திய ஆசிரியர்களின் காலில் விழுந்து மாணவர்கள் ஆசி பெற்றனர். அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் என ஒன்றாக அமர்ந்து அறுசுவை உணவு அருந்தி பிரியா விடை பெற்றனர். இதில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் சிலர் அரசு மற்றும் தனியார் துறையில் தற்போது பணியாற்றியும் சிலர் ஓய்வு பெற்றும் உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் திருமணமாகி பேரப்பிள்ளைகள் எடுத்து சிலர் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் மருத்துவராகவும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். 90 வயது கடந்த ஆசிரியர்கள் உடன் 60 வயது கடந்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story