7-ந் தேதி கருணாநிதி நினைவு நாள்:அமைதி ஊர்வலம்

7-ந் தேதி கருணாநிதி நினைவு நாள்:அமைதி ஊர்வலம்
மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அறிக்கை
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாள் 7-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு பெரியார் மேம்பாலம் வழியாக அண்ணா பூங்காவில் உள்ள கருணாநிதி சிலை வரை நடைபெறுகிறது. இதையடுத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மத்திய மாவட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களிலும் கருணாநிதியின் படம் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். இதேபோல பேரூரில் உள்ள வார்டுகளிலும் மற்றும் ஒன்றியங்களில் உள்ள கிளைகள் சார்பிலும் கருணாநிதியின் படம் வைத்து அவரது நினைவை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள், கவுன்சிலர்கள், இளைஞர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளை சார்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story