7 கடைகளுக்கு சீல், ரூ.1,55,000 அபராதம்

7 கடைகளுக்கு சீல், ரூ.1,55,000 அபராதம்

திண்டுக்கல்லில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 7 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.1,55,000 அபராதம் விதிக்கப்பட்டது.


திண்டுக்கல்லில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 7 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.1,55,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், 60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், 7 கடைகளுக்கு சீல், ரூ.1,55,000 அபராதம் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் செல்வம், ஜாபர்சாதிக், சரவணகுமார், முருகன், வசந்தன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் மேற்கு ரதவீதி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நேமாராம்(45) என்பவர் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர் .ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர் .மேலும் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 60 கிலோவை பறிமுதல் செய்துள்ளனர் .ஏழு கடைகளுக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர்களுக்கு 1.50 லட்சம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story