ஆத்தூரில் ரூ.86 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

ஆத்தூரில் ரூ.86 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

ஏலத்திற்கு வந்த பருத்தி மூட்டைகள் 

ஆத்தூர் அருகே புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.86 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.

ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், திட்டக்குடி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 587 விவசாயிகள் 3741 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர், திருப்பூர், திருச்சி, சேலம், கோவை பகுதியைச் சேர்ந்த 24 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்திருந்தனர்.

இதில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ.6, 799முதல் ரூ.7,459 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.9,689 முதல் 11, 789 ரூபாய் வரை, கொட்டு பருத்தி (கழிவு) 3,689முதல் 5,489 வரை விற்பனையானது. மொத்தம் 3,741 மூட்டை பருத்தி ரூ.86 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தைக் காட்டிலும் பருத்தி வரத்து குறைவாக வந்த போதிலும் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags

Next Story