குமரியில் ஓவர் லோடு டாஸ் லாரி டிரைவர்கள் 9 பேர் கைது 

குமரியில் ஓவர் லோடு டாஸ் லாரி டிரைவர்கள் 9 பேர் கைது 
பைல் படம்
குமரியில் ஓவர் லோடு டாஸ் லாரி டிரைவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.  

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகளும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மாவட்டத்திற்கு நுழையும் டாரஸ் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் மூன்று லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அதன் டிரைவர்கள் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுடர்மனி, செண்பகராமன் புதூர் பகுதி சுரேஷ், யாக்கோபுரம் பகுதி சேர்ந்த பிரதிப் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து, மேலும் உரிமையாளர் பார்த்திபன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைதான மூன்று லாரி டிரைவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல் பால்குளம் பகுதியில் நடந்த சோதனையில் மண்டைக்காடு பகுதி சேர்ந்த பிரபு (41), பாகோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35), வில்லுக்குறி பகுதி சேர்ந்த ஜூட் ஆல்பர்ட் ராஜா (36), தலக்குலம் பகுதி ஜெகன் (32), குருந்தன் கோடு பகுதி சஞ்சு (24) குலசேகரம் பகுதி ஆல்பர்ட் ( 45) ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த கில்கின் ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379 ( திருட்டு) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Tags

Next Story