95 வயது மூதாட்டியை ஊர்வலமாக அழைத்து தேசியக்கொடி ஏற்றிய இளைஞர்கள்
Nagercoil King 24x7 |15 Aug 2024 11:48 AM GMT
குமரியில்
78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது. அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரம் பகுதியில் இளைஞர்கள் சுதந்திர தின விழாவை வித்தியாசமாக கொண்டாடினார்கள். .பொதுவாக சுதந்திர தினத்திற்கு அரசியல்வாதிகள் அல்லது சமூக ஆர்வலர்கள் தொழிலதிபர்கள் கொடியேற்றி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இவற்றிற்கு மாறாக திருத்துவபுரம் பகுதி இளைஞர்கள் அந்தப் பகுதியை சேர்ந்த பார்வதி என்ற 95 வயது மூதாட்டி ஒருவரை அவரது வீட்டில் இருந்து செண்டை மேளம் முழங்க, கையில் தேசிய கொடியை கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் திருத்துவபுரம் சந்திப்பில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் மூதாட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் மூதாட்டி ஒருவரை கௌரவித்து இளைஞர்கள் செய்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story