நாமக்கல்லில் புறவழிச்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு.
நாமக்கல் மாநகராட்சி, வேட்டாம்பாடியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மேயர் .து.கலாநிதி மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் ஆகியோர் முன்னிலையில் விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2025-2026-ன் கீழ், நாமக்கல் நகரில் மரூர்பட்டி - வேட்டாம்பாடி, வேட்டாம்பாடி - வசந்தபுரம் வரை ரூ.95.12 கோடி மதிப்பீட்டில் 2 புறவழிச்சாலைகளை திறந்து வைத்து, வசந்தபுரம் – லத்துவாடி, லத்துவாடி - வள்ளிபுரம் வரை ரூ.103.00 கோடி மதிப்பீட்டில் 2 புறவழிச்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். நாமக்கல் புறவழிச்சாலையின் திட்ட மதிப்பீடு - ரூ.297 கோடியாகும். முதலைப்பட்டி முதல் வள்ளிபுரம் வரை 22 கி.மீ.நீளத்திற்கு நடைபெறுகிறது.மொத்தம் கிராமங்கள் – 11, நிலஎடுப்பு பரப்பளவு -146 ஏக்கர், நிலஎடுப்பு தொகை - ரூ.104 கோடி, புறவழிச் சாலைப் பணி 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டப் பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.இதில் இன்றைய தினம் நாமக்கல் நகரில் மரூர்பட்டி முதல் வேட்டாம்பாடி வரை (கி.மீ 2/2-6/0 (கட்டம் 2), வேட்டாம்பாடி முதல் வசந்தபுரம் வரை (கி.மீ 6/0 -12/0- (கட்டம் 3) ஆகிய 2 புறவழிச்சாலைகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு கட்டப் பணிகளும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும், வசந்தபுரம் முதல் லத்துவாடி வரை (கி.மீ 12/0-16/0 (கட்டம் 4) மற்றும் லத்துவாடி முதல் வள்ளிபுரம் வரை (கி.மீ 16/0-22/387 (கட்டம் 5) ஆகிய புறவழிச்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.முதலைப்பட்டி முதல் புதிய பேருந்து நிலையம் வரை 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.25 கோடி மதிப்பில் புறவழிச்சாலை - 800 மீட்டர், இணைப்பு சாலை -200 மீட்டர் கடந்த 22.10.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. கட்டம் -2-ல் ரூ.119 கோடி மதிப்பில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு (ஒரு இரயில்வே மேம்பாலம் உட்பட) புதிய பேருந்து நிலையம் முதல் வேட்டாம்பாடி வரை புறவழிச்சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. இரயில்வே மேம்பாலப் பணி 35% முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூலை-2026ல் இரயில்வே மேம்பாலத்தினை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கட்டம் -3-ல் வேட்டாம்பாடி முதல் திருச்சி சாலை வரை ரூ.47.47 கோடி மதிப்பில் 6 கி.மீ நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கட்டம் -4-ல் ரூ.43.00 கோடி மதிப்பில் திருச்சி சாலை முதல் லத்துவாடி வரை 4 கி.மீ நீளத்திற்கும், கட்டம் -5-ல் ரூ.60 கோடி மதிப்பில் மோகனூர் சாலை முதல் (லத்துவாடி) வள்ளிபுரம் வரை 6.4 கி.மீ நீளத்திற்கும் 2 புறவழிச்சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம் முட்டை உற்பத்தியின் தலைநகரமாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய கோழி மற்றும் முட்டை உற்பத்தி மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று. நாமக்கல் லாரி பாடி தயாரிப்பிற்கு உலகளவில் புகழ்பெற்றது. 18 அடி உயரத்தில் உள்ள ஆஞ்சநேயர் சிலை மிகச் சிறப்பு வாய்ந்தது. இயற்கை அழகு, மூலிகை செடிகள், அகாச கங்கை நீர்வீழ்ச்சி போன்றவற்றால் புகழ்பெற்றது கொல்லிமலைப் பகுதி. பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிகம் உள்ள மாவட்டமாகும். நெல், கரும்பு, மரவள்ளி போன்ற பயிர்கள் முக்கியமாக விளைகின்றன. எனவே தான் தமிழ்நாட்டிலேயே சாலை வசதிக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





