ரூ.95.12 கோடி மதிப்பீட்டில் 2 புறவழிச்சாலைகள் திறப்பு விழா எம்.பி கே. ஆர்.என் ராஜேஷ்குமார் பங்கேற்பு.

நாமக்கல் மாநகரில் ரூ.95.12 கோடி மதிப்பீட்டில் 2 புறவழிச்சாலைகள் திறப்பு விழா மற்றும் ரூ.103.00 கோடி மதிப்பீட்டில் 2 புறவழிச்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெறவுள்ளதையொட்டி, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்,
முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் ஒன்றியம், வேட்டாம்பாடியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , வருகின்ற 07.01.2026 அன்று மரூர்பட்டி - வேட்டாம்பாடி, வேட்டாம்பாடி - வசந்தபுரம் வரை ரூ.95.12 கோடி மதிப்பீட்டில் 2 புறவழிச்சாலைகள் திறப்பு விழா மற்றும் வசந்தபுரம் – லத்துவாடி, லத்துவாடி - வள்ளிபுரம் வரை ரூ.103.00 கோடி மதிப்பீட்டில் 2 புறவழிச்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து, மேயர் து.கலாநிதி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, நாமக்கல் மாநகர பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள், தொழில் முனைவோர்கள், கோழிப் பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள் என பலதரப்பட்ட மக்களின் ஏறத்தாழ 15 ஆண்டுகால கோரிக்கையாகும். வளர்ந்து வரும் நகரங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்றாகும். நாமக்கல் நகரில் திருச்சி – சேலம், நாமக்கல் – சேந்தமங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், எரிபொருள் சிக்கன தேவையினை கருதியும் இப்பகுதியில் புறவழிச்சாலை அமைந்தால் இதனை கட்டுப்படுத்த இயலும் என்ற வகையில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு நாமக்கல் நகரில் 5 கட்டங்களாக புறவழிச்சாலை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை முதற் கட்டமாகவும், புதிய பேருந்து நிலையம் – சேந்தமங்கலம் இணைப்பு சாலை வரை 2-வது கட்டமாகவும், சேந்தமங்கலம் – திருச்சி இணைப்பு சாலை வரை 3-வது கட்டமாகவும், திருச்சி – மோகனூர் இணைப்பு சாலை வரை 4-வது கட்டமாகவும், மோகனூர் – பரமத்தி தேசிய நெடுஞ்சாலை இணைக்கின்ற வரை 5-வது கட்டமாகவும் நடைபெறுவதற்கு, தமிழ்நாடுமுதலமைச்சர் நிலம் கையகப்படுத்துவதற்கும் சேர்ந்து ஏறத்தாழ ரூ.400.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதனடிப்படையில் இந்த புறவழிச்சாலை அமைப்பதற்காக 145 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சாலை அமைப்பதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக புதிய பேருந்து நிலையம் – சேந்தமங்கலம் இணைப்பு சாலை வரை, 3-வது கட்டமாக சேந்தமங்கலம் – திருச்சி இணைப்பு சாலை வரை பணிகள் முடிவுற்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களால் வருகின்ற 07.01.2026 அன்று மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. 3 கட்ட சாலை பணிகளுக்கு ஏறத்தாழ 12 கி.மீ நீளத்திற்கு 2023-ம் ஆண்டு ரூ.194 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி, இன்று அப்பணிகள் முடிவுற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 4-வது கட்டமாக திருச்சி – மோகனூர் இணைப்பு சாலை வரை, 5-வது கட்டமாக மோகனூர் – பரமத்தி தேசிய நெடுஞ்சாலை இணைக்கின்ற வரை சாலை அமைப்பதற்கான பணிகளும் அன்றைய தினம் அடிக்கல் நாட்டப்படவுள்ளது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், துணை மேயர் செ.பூபதி, தலைமைப்பொறியாளர் (நெ) நபார்டு (ம) கிராமச்சாலைகள், சென்னை பி.செந்தில், கண்காணிப்பு பொறியாளர் (நெ), நபார்டு (ம) கிராமச்சாலைகள், சேலம் என்.எஸ்.சரவணன், கோட்டப் பொறியாளர் (நெ) கே.அகிலா உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story