காலணிக்குள் ஒளிந்திருந்த நாகப்பாம்பு பாம்பு
கோவை வெள்ளலூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் பிரதீப்.இவரது வீட்டில் வைக்கபட்டிருந்த காலணி ஸ்டேண்டில் ஷூவின் உள்ளே நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.காலனியில் இருந்து சப்தம் கேட்கவே ஸ்டாண்ட் அருகே சென்று பார்த்த பொழுது பாம்பு சீரும் சத்தம் கேட்டுள்ளது.
பாம்பு இருப்பதை சிறுவன் பார்த்தவுடன் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் பாம்பை லாவகமாக பிடித்தார்.பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
மழைக்காலத்தில் பாம்புகள் வெளியில் உலா வரும் பொழுது கதகதப்பான இடத்தை நோக்கி நகர்வது வழக்கம் அதன் அடிப்படையில் மழை காரணமாக ஷூவிற்குள் புகுந்த பாம்பு பதுங்கி இருக்கின்றது. நகர்ப்புறமாக இருந்தாலும் பொதுமக்கள் இது போன்ற காலங்களில் கவனமாக இருப்பது அவசியம் என பாம்பு பிடி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.