சங்கரன்கோவில் அருகே உணவகத்தில் சிலிண்டர் கசிவு ஏற்பட்ட தீ விபத்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் இருந்து சேர்ந்த மரம் செல்லும் வழியில் அரசு மதுபான கடைக்கு எதிரே ராஜா என்பவருக்கு சொந்தமான சாலையோர உணவகம் செயல்பட்டு வருகிறது இந்த உணவகத்தில் திடீரென எரிவாயு சிலிண்டர் கசிந்து கடை முழுவதும் தீ பற்றி எரிந்தது.
இதில் கடையில் இருந்த டிவி, ஃபேன், பிரிட்ஜ், மின்சார விளக்குகள் பிளைவுட்டுகள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆகியது.... தகவல் அறிந்து விரைந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து விபத்து ஏற்பட்ட சிலிண்டரை பத்திரமாக மீட்டனர்.
சிலிண்டர் கசிவு ஏற்பட்டு கடையில் தீ பரவியவுடன் அபகுதியில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியே வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஹோட்டலில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து சேந்தமரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.