கொடைக்கானலில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா
பச்சை ரோஜா
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பச்சை நிற ரோஜா மலர்கள் பூத்து குலுங்குவதை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர்ப்பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக பலவகையான மலர் வகைகள் மலர் படுகைகளில் பூத்து குலுங்குகின்றன.
குறிப்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று மலர் கண்காட்சி நடைபெற உள்ளது, இதனையடுத்து பிரையண்ட் பூங்காவில் தற்போது பச்சை நிறத்தில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்கின்றன,இந்த ரோஜா மலரின் இதழ்கள் பச்சை நிறத்தில் இலைகள் போன்று அமைந்துள்ளது இந்த பூவின் சிறப்பு அம்சமாக இருப்பதாக தோட்டக்கலை துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்,மேலும் இந்த பூங்காவில் பச்சை நிறத்தில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குவதால் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
Next Story