வேலை இல்லாத விரக்தியில் கூலித்தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள சிந்தன் விளை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (51). கொத்தனார் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஜான்சன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை செய்யும் இடத்தில் விபத்து ஏற்பட்டதால், பின்னர் அவருக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த இவர் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜான்சன் இரவு தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் விஷயம் குடித்ததாகவும் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஜான்சனை சிகிச்சைக்காக கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஜான்சன் இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.