கம்மாபட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது - மொத்த விற்பனையாளருக்கு போலிஸ் வலைவீச்சு

கம்மாபட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது - மொத்த விற்பனையாளருக்கு போலிஸ் வலைவீச்சு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரித்திக்கு தகவல் கிடைத்தது . தகவலின் அடிப்படையில் DSP தனிப்படையினர் கம்மாபட்டிக்கு சென்ற போது நல்லமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் இறைவன் வயது 43 சட்ட விரோதமாக கஞ்சாவிற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. பிறகு இறைவனை பிடித்து விசாரனை செய்தனர். மேலும் அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் இவருக்கு மொத்தமாக கஞ்சா விற்றது யார் என்ற கோணத்தில் விசாரணை செய்து மொத்த விற்பனையாளைரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story