காஞ்சிபுரத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் 2024 க்கான நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவ்வகையில் தேர்தல் அறிவிப்பு அறிவித்த உடனே, தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமலுக்கு வந்தது .

தேர்தல் பணிகளை கவனிக்க உரிய அலுவலர்கள் மாவட்ட முழுவதும் நியமிக்கப்பட்டு பணிகளை துவக்கி உள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் கலை செல்வி மற்றும் எஸ் பி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக அதிமுக பாமக பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் அறிவித்த நன்னடத்தை விதிகள் குறித்தும், வேட்பு மனு பெறுதல் , தாக்கல் , பிரச்சாரம் பொதுக்கூட்டம் உள்ளிட்டவை குறித்த நடைமுறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்தார். தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்ய அறிவித்த சி விஜில் செயலி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடத்தை விதிகள் குறித்தும் சந்தேகங்களையும் , பிரச்சாரம் அனுமதி உள்ளிட்டவை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க கூறினர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தவும் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story