பிள்ளாநல்லூர் பேரூரில் திமுக கழக செயல்வீர்கள் கூட்டம் !

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர் பேரூரில் திமுக கழக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பங்கேற்றனர். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டமானது ஒன்றிய திமுக செயலாளர் சேர்மன் கேபி.ஜெகநாதன், பேரூர் திமுக செயளாலர் மற்றும் துணைத் தலைவர் சுப்ரமணியம் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் பேரூர் மன்ற தலைவர், வார்டு திமுக செயலாளர்கள், பேரூர் மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story