தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
 பைல் படம்
விழுப்புரம் சாலமேட்டை சேர்ந்த சங்கரன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் சாலமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன்(23) இவருக்கு கடந்த மூன்று வருடமாக நுரையீரல் பாதிப்பால் அவதி அடைந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி எலி பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றவரை, அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கரன், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story