பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து கார் மீது மோதி விபத்து
விபத்துக்குள்ளான பேருந்து
பொள்ளாச்சியில் இருந்து கோவை வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது..
இதில் தனியார் பேருந்துகள் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக முந்திக்கொண்டு அதிவேகமாக கோவை சாலையில் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.. இந்நிலையில் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று கோவில் பாளையம் அருகே உள்ள முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலத்தில் அதிவேகமாக வந்துள்ளது.
அப்போது பேருந்துக்கு முன்னால் ஓசூர் பகுதியில் சேர்ந்த கார் ஓட்டுநர் தனது குடும்பத்தினருடன் சொந்த வேலை காரணமாக கோவை வந்துவிட்டு பொள்ளாச்சி நோக்கி வந்துள்ளனர் அப்போது பின்னால் அதிவேகமாக வந்த பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.. இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்து பயணிகளும் காரில் பயணித்த பயணிகளும் உயிர்த்தப்பினர்..
ொள்ளாச்சி கோவை சாலையில் தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதற்கு காரணம் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வது மட்டுமே என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்சி வருகின்றனர்.. எனவே அதிவேகமாக செல்லும் பேருந்துகள் மீது காவல்துறையினரும் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..