அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

சங்கராபுரம் ஒன்றிய சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சங்கராபுரத்தில், சங்கராபுரம் ஒன்றிய சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமுர்த்தி, இளந்தேவன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு பேசுகையில், 'லோக்சபா தேர்தலையொட்டி, கிராமப் புறங்களில் சுவர்களைப் பிடித்து சுவர் விளம்பரம் எழுத வேண்டும். தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வை துண்டு பிரசுரம் முலம் வீடு வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கடுமையாக உழைத்து வேட்பாளரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story