கடற்கரை கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

கடற்கரை கிராமங்களில்  அதிமுக வேட்பாளர் பிரசாரம்
குளச்சல் பகுதியில் பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர் பசிலியான்
குளச்சல் கடலோர கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் கடலோர கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். குளச்சல் தொகுதிக்குட்பட்ட குறும்பனை, வாணியக்குடி, கோடி முனை பகுதிகளில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு மீனவ கிராமங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலர்மாலை, சால்வை, பூச்செண்டுகள் கொடுத்து வரவேற்பாளித்தனர்.

இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பசிலியான் பேசியதாவது:- எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற மீனவர் இனத்திலிருந்து வந்து நான் உங்களின் மேம்பாட்டிற்காக, நல்வாழ்வுக்காக தேர்தலில் போட்டியிடுகிறேன். மீனவர் இனம் உயர்ந்து விளங்க எம்ஜிஆர், ஜெயலலிதா பல திட்டங்களை தந்தனர். மீனவர்கள் படுகின்ற துன்பங்களையும் துயரங்களையும் அனுபவ ரீதியாக நான் அறிந்தவன்.

இந்த தொகுதியில் என்னை வெற்றி பெற வைத்தால் உங்களை கை தூக்கி விட என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். மேலும் கடலோர கடலோர கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடல் ஆம்புலன்ஸ் திட்டம் இதுவரை நிறைவேறாமல் உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் மீனவர்களின் நலன் காக்கும் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். என பேசினார். வேட்பாளருடன் அதிமுக அமைப்புச் செயலாளர் பச்சைமால் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story