வேலம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேலம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

திருப்பூர் மாவட்டம் 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை அதிமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் ராமச்சந்திரன் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்குட்பட்ட 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை ரதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், கோவை மண்டல பொறுப்பாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகுத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் அமைச்சர் செம. வேலுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தரைபுதூர் நடராஜன், பரமசிவம் உட்பட அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, புராட்சி பாரதம், மஜமுக, புதிய தமிழகம் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story