அம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா
கூழ்வார்த்தல் திருவிழா
அம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தில், பழமையான சரவள்ளியம்மன் கிராம தேவதை கோவில் உள்ளது. இக்கோவிலில், முத்துமாரியம்மன், வேம்புலியம்மன், கங்கையம்மனுக்கு தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.
இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடத்த, கடந்த 21ம் தேதி, அம்மனுக்கு வேண்டி காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, கோவிலில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள், இரவு பூக்குழியில் இறங்கி தீ மிதித்தனர். இரவு முழுதும், சரவள்ளியம்மன், வேம்புலியம்மன், முத்துமாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Next Story