சங்கரன்கோவில் அருகில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழ அழகு நாச்சியார் புரத்தை சேர்ந்த விவசாயி மாயகிருஷ்ணனின் மனைவி என்பது வயது மூதாட்டி கருப்பாய் இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் கருவேப்பிலை பறிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மூதாட்டியை காணவில்லை என உறவினர்கள் தேடிய நிலையில் அருகில் இருந்த சின்னச்சாமி என்பவருடைய விவசாய கிணற்றில் பார்த்தபோது மூதாட்டி கருப்பாயி மோட்டார் பைப் லைனை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய நிலையில்,
தண்ணீரில் மிதப்பதை கண்டனர் உடனடியாக அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் வலையில் கயிறு கட்டி கிணற்றுக்குள் இருந்த மூதாட்டியை போராடி மீட்டனர்.
கிணற்றில் தவறி விழுந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தத்தளித்து உயிருக்கு போராடிய 80 வயது மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரை அப்பகுதியில் இருந்தவர்கள் பாராட்டினர்.