ஆஞ்சநேயர் கோவில் நன்னீராட்டு விழா: நகரில் போக்குவரத்து மாற்றம்

ஆஞ்சநேயர் கோவில் நன்னீராட்டு விழா: நகரில் போக்குவரத்து மாற்றம்

ஆஞ்சநேயர் கோவில்

ஆஞ்சநேயர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் நாமக்கல்லில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது. தனி கட்டுப்பட்டு அறை அமைத்து 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நவ 1ம் தேதி காலை 9,30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற உள்ளது. ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்கள் எந்தவொரு இடையூறுமின்றி வழிபாடு செய்வதற்கு ஏதுவாக, நாமக்கம் நகரில் 31ம் தேதி நள்ளிரவு முதல், 1ம் தேதி நள்ளிரவு வரை, நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மற்றும் திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல் வரும் வாகனங்கள் சேலம் ரோடு, கடை வீதி வழியாக நாமக்கல் பஸ் நிலையத்திற்கும், நாமக்கல் பஸ் நிலையத்திலிருந்து சேலம் மற்றும் திருச்செங்கோடு செல்லும் வாகளங்கள் பரமத்தி ரோடு, வள்ளிபுரம், பைபாஸ் வழியாக செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 31.10.2023-ம் தேதி நள்ளிரவு 12.00 மணி முதல் 01.11.2023-ம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை கனரக வாகனங்கள் நாமக்கல் நகரப்பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை. ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும், நாமக்கல் உழவர் சந்தை சந்திப்பு வழியாக பட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும், இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் தங்களது வாகனத்தை பூங்கா சாலையிலும், நான்கு சக்கரம் மற்றும் இதர வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பொய்யேரிக்கரை ரோட்டில் உள்ள வாகன நிறுத்தங்களில் நிறுத்தி விட்டு வழிபாட்டிற்கு செல்லவேண்டும் வாகன நிறுத்தம் மற்றும் பஸ் நிலையத்திலிருந்து கோவிலுக்கும், கோவிலிலிருந்து பஸ் நிலையம் மற்றும் வாகன நிறுத்தத்திற்கு செல்வதற்கும் கட்டணமில்லா பஸ் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்படாத இடங்களில் இலவச பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான இலவச காலணி பாதுகாப்பு இடம் மற்றும் இலவச தகவல் மையம் ஆகியவை உழவர் சந்தை அருகில் அமைக்கப்பட்டுள்ளது ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேசு பாதுகாப்பிற்காக குற்றத்தடுப்பு குழு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு, தியணைப்பு பிரிவு மற்றும் மருத்துவக்குழு ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் மோப்ப நாய் பிரிவு மூலம் கோவில் பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விழா நடைபெறும் அனைத்து பகுதியும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு சிறப்பு காவல் கட்டுபாட்டு அறையின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் தலைமையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா சிறப்புடன் நடைபெற பக்கதர்களும், பொதுமக்களும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிகிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story