மங்கை நல்லூரில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம் !

மங்கை நல்லூரில் கலைஞரின் 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம் !

கலைஞர் பிறந்தநாள்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே மங்கநல்லூரில் திமுகவினர் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101-ம் ஆண்டு பிறந்தநாள் விழா திமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கலைஞர் உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர்.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் கருணாநிதியின் 101 ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய செயலாளர் மங்கை.சங்கர் தலைமையில் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு, பேருந்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி, தென்னங்கன்றுகள் வழங்கினர்.

Tags

Next Story