ஆத்து மாரியம்மன் கோவில் திருவிழா

ஆத்து மாரியம்மன் கோவில் திருவிழா

ஆத்து மாரியம்மன் கோவில் திருவிழா

திண்டுக்கல் கோபால்பட்டி அடுத்துள்ள செடிப்பட்டி ஆத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் ஞாயிற்றுக்கிழமை செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அடுத்துள்ள செடிப்பட்டி ஆத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மார்ச் 3 ஆம் தேதி கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் மற்றும் புனித நீராடி ஆத்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தோரண மரம் ஊன்றுதல், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கோவில் வீட்டிலிருந்து தீச்சட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆத்து மாரியம்மன் கோவிலில் ஸ்தாபிதம் செய்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நடந்தது. இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags

Read MoreRead Less
Next Story