ஆத்தூர் : தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு தபால் வாக்கு சேகரிக்கும் பணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலையில் தொடக்கம் இதில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளும் தபால் வாக்கு சேகரிக்க 18 வாகனங்களை பணி தொடங்கியது 943 விண்ணப்பம் அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமந்துறை, பெத்தநாயக்கன் பாளையம், ராமநாயக்கன்பாளையம் , ஆத்தூர்,பைத்தூர், அம்மம்பாளையம் உள்ளிட்ட 284 வாக்குச்சாவடி மையங்களில், 225 வாக்குச்சாவடி மையத்திற்குட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்டோர்கள் வாக்களிக்கும் வகையில் சீலிடபட்ட பெட்டியில் தபால் வாக்குகளை பெறுவதற்காக 18 வாகனங்களில் அலுவலர்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கியது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான பிரியதர்ஷினி ஆய்வு மேற்கொள்ளபட்டு அலுவலர்களை அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டனர். இதனைதொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் சென்ற தேர்தல் அலுவலர்கள் 90 வயது உடைய அழகம்மாள் மூதாட்டி வீட்டில் வாக்கை பதிவு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story