விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் !

ஆத்தூர் :கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ 96 லட்சத்திற்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது.இதில் விராலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 15,466ரூபாய்க்கும், அதிகபட்சமாக 19,939ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 14,569 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 16, 516 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 15, 689அதி பட்சமாக 30,000 ரூபாய் விலை போனது. 1042 மூட்டைகள் மூலம் 96 லட்சத்திற்கு ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக பனங்காளி மஞ்சள் குவிண்டால் 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. இதுவே முதல்முறை என்றும் சாகுபடி பரப்பளவு குறைந்ததால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story