ஆவுடையானூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஆவுடையானூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மனுவுடன் வந்த பெண்கள்

ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி சிறப்பு கூட்டம் நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் (எ) கோபி தெரிவித்திருந்தார்.

அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நாகராஜன், செல்வன், தங்கப்பாண்டி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். துணைத்தலைவர் மகேஸ்வரி தலைமையில் 12 உறுப்பினர் கள் கூட்டத்தை புறக்கணித்த னர்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திற்கு திரண்டு வந்திருந்த ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது தங்கள் வார்டு பகுதியில் உள்ள குறைகளை வார்டு உறுப்பினர்கள் யாரும் கேட்பதில்லை, கோரிக்கை களை நிறைவேற்றி தருவதில் அலட்சியம் காட்டுகின்றனர். தொடர்ந்து அவர்கள் ஊராட்சி கூட்டத்தை புறக்கணிப்பது கண்டனத்துக்குறியது என கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஊராட்சி செயலரிடம் அளித்தனர். இதனிடையே கூட்டத்தை புறக்கணிக்க துணைத் தலைவர் மகேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்தித்து கடிதம் அளித்தனர்.

Tags

Next Story