திருமாவளவனுக்கு சிறந்த எம்பி., விருது

திருமாவளவனுக்கு சிறந்த எம்பி., விருது

சிறந்த எம்பி., யாக விசிக., கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பி.,யுமான திருமாவளவனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த எம்பி., யாக விசிக., கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பி.,யுமான திருமாவளவனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருந்து, சாமானியர்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தலைவர்களை அங்கீகரிக்கும் விதமாக Prime 9 Tamil மற்றும் Minnambalam ஆகியவை இணைந்து TopMP - எழுச்சி விருது சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பிக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகளான மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. கே. ராஜன் இந்து பத்திரிக்கையின் ஊடகவியலாளரான ஏ. எஸ். பன்னீர்செல்வன், மேனாள் துணைவேந்தர் அசோக் வர்தன் செட்டி, மேனாள் காவல்துறை தலைவர் ரவி IPS ஆகியோர் தேர்வுக் குழுவில் அங்கம் வகித்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story