கரூரில் கூடைப்பந்து போட்டி

கரூரில் கூடைப்பந்து போட்டி

செய்தியாளர் சந்திப்பு

கரூரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் ஹோட்டல் ஹேமலாவில், கரூர் கூடைப்பந்து குழு இணைந்து நடத்தும் எல் ஆர் ஜி நாயுடு நினைவு சுழல் கோப்பைகான, 64 ஆம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடை பந்து போட்டியும், கேவிபி சுழற் கோப்பைக்கான 10-ம் ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடை பந்து போட்டிகள்,

கரூர், திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மே 22ஆம் தேதி துவங்கி 27ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கூடைப்பந்து கழகத்தின் தலைவர் பாஸ்கர், செயலாளர் முகமது கமாலுதீன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, ஆண்கள் அணியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்,

இதே போல் 2ம் இடம் பெறுவருக்கு ரூபாய் 80,000-மும், 3-ம் இடம் பெறுவதற்கு ரூபாய் 60,000-மும், 4-ம் இடம் பெறுவோருக்கு ரூபாய் 50,000-மும் வழங்கப்பட உள்ளது. இதே போல, பெண்கள் அணியில் முதல் பரிசு ரூபாய் 75,000, 2-ம் பரிசு 40 ஆயிரம், 3-ம் பரிசு 30 ஆயிரம், 4-ம் பரிசு 20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

Tags

Next Story