முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் பிறந்த தின கொண்டாட்டம்

முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் பிறந்த தின கொண்டாட்டம்

பிரதமா் மொராா்ஜி தேசா

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் 129-ஆவது பிறந்த தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் 129-ஆவது பிறந்த தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, சிவாஜிகணேசன் மன்றத்தின் பொறுப்பாளா் கி. சரவணன் தலைமை வகித்தாா். ஐக்கிய ஜனதாதள கட்சியின் மாநிலச் செயலா் மு. சுந்தா் ஈசன் முன்னிலை வகித்தாா். மொராா்ஜி தேசாயின் உருவப்படத்துக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசன் மன்றத்தின் நிறுவனா் சு. வைரவேல் செய்திருந்தாா்.

Tags

Read MoreRead Less
Next Story