முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்; குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

எழும்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளன்று பிறந்த குழந்தைகளுக்கு, எம்.எல்.ஏ., பரந்தாமன் தங்க மோதிரம் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினின் 71 ஆவது பிறந்த நாளையொட்டி நேற்று சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த 17 ஆண் குழந்தைகள், 16 பெண் குழந்தைகள் என மொத்தம் 33 குழந்தைகளுக்கு எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஒரு கிராம் தங்க மோதிரம், புதிய உடை, உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், தமிழ்நாடு முதலமைச்சரின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களின் பிறந்த நாளை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டாடப்பட வேண்டும் என்று எங்கள் தலைவர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா பிறந்தநாள் மட்டும் இன்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கும் கூட மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த மருத்துவமனையில் இருந்து ஸ்கேன் உள்ளிட்டவற்றுக்கு வெளி மருத்துவமனைக்கு செல்வதை குறைத்து வருகிறோம், இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story