பேருந்து வசதி:ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பரளச்சி அருகே மேலையூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து வடக்கு நத்தம் விளாத்திகுளம் வழியாக மூன்று வேலைகளிலும் அரசு பேருந்துகள் இயங்கி வந்தது. தற்பொழுது இந்த வழித்தடத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதன் காரணமாக வடக்கு நத்தம் கீழ் அருணாச்சலபுரம் மேல அருணாச்சலபுரம் வெங்கடாசலபுரம் புதூர் கரிசல்குளம் ஆகிய பகுதியைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளிக் கல்லூரி மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே மூன்று வேளையும் உரிய முறையில் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்..

Tags

Next Story