சோலை கொட்டாய் மளிகை கடையை சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்கு
காவல் நிலையம்
தர்மபுரி அருகே உள்ள சோலை கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடைக்கு வந்த ஒரு கும்பல் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இதேபோல் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்களையும் சேதப்படுத்து உள்ளனர். பின்னர் சதாசிவத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தில் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.