விருதுநகரில் தேர்தல் நடத்திய விதியை மீறியதாக ஒருவர் மீது வழக்கு பதிவு
காவல்துறை விசாரணை
விருதுநகரில் தேர்தல் நடத்திய விதியை மீறியதாக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் காந்திபுரம் பகுதியில் தேர்தல் நடத்திய விதியை மீறி பொதுமக்களிடம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் கூறி அசோக்குமார் என்பவர் மனுக்கள் பெறுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் வந்தது இதை அடுத்து அங்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் மனு பெற்றுக் கொண்டிருந்த அசோக் குமார் என்பவரிடம் இருந்த மனுக்களை கைப்பற்றி அவர் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story