முதல்வர் விழா முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு!

முதல்வர் விழா முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு!

ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி அருகே தமிழக முதல்வர் பங்கேற்கும் விழா முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அருகே சூசைபாண்டியாபுரத்தில் தமிழக முதல்வர் பங்கேற்கும் விழா முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 25ஆம் தேதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சிக்குட்பட்ட சூசைபாண்டியாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதிகனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். இந்நிலையில், விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, செயற்பொறியாளர் செல்வி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story