சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

கொடியேற்றம்

தேவகோட்டை நகர சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர சிவன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு கொடியேற்றப்பட்டு, அதைனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் மற்றும் மூலவருக்கு காப்பு கட்டுடன் விழா தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்-22 திங்கள்கிழமை மாலை 6 மணிக்கும், தேரோட்டம் ஏப்-24 புதன்கிழமையும், தெப்பம் தினந்தோறும் மாலை 7 மணிக்கு அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனையும் நடைபெற உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story