“COFFEE WITH CONSTABLE” கலந்துரையாடல் நிகழ்ச்சி
கலந்துரையாடல் நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவியால் உருவாக்கப்பட்ட திட்டமான காவலர்களுடன் கலந்துரையாடும் “COFFEE WITH CONSTABLE” என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் காவலர்களின் நலன் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினை மேம்படுத்தி மேலும் சிறப்பான முறையில் பணியாற்ற ஏதுவாக்குவதாகும்.
இந்நிலையில் இன்று மாவட்ட காவல் அலுவலத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் “COFFEE WITH CONSTABLE” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு, சிறப்புப் பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை உள்ளவர்களில் 'K'- என்ற எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் காவலர்களில் தோராயமாக 12 நபர்களை தேர்ந்தெடுத்து மாவட்ட காவல்துறையை மேம்படுத்தும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இந்த கலந்துரையாடல் மூலம் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குறை,நிறைகள் மற்றும் மாவட்ட காவல்துறையினை மேம்படுத்தும் சில முக்கிய ஆலோசனைகளை பெற்று அதனை நடைமுறைபடுத்துவதன் மூலம் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் மனநிலையை அறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தும் காவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றும் வகையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.