வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வினை பார்வையிட்ட ஆட்சியர் !

வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வினை பார்வையிட்ட ஆட்சியர் !
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை பகுதிகளில் இன்று 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மக்களவை தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 4,113 வாக்காளர்களும், 40 சதவீதம் அதற்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 2,546 வாக்காளர்களும் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதன்படி, இன்று முதல் 6.4.2024 மற்றும் 8.4.2024 ஆகிய நாட்களில் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவர்கள் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 92.இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 611 வாக்காளர்களும், 40 சதவீதம் அதற்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 366 வாக்காளர்களும் என மொத்தம் 977 வாக்காளர்கள், 93.சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 444 வாக்காளர்களும், 40 சதவீதம் அதற்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 286 வாக்காளர்களும் என மொத்தம் 730 வாக்காளர்கள், 94.நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 760 வாக்காளர்களும், 40 சதவீதம் அதற்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 527 வாக்காளர்களும் என மொத்தம் 1,287 வாக்காளர்கள், 95.பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 756 வாக்காளர்களும், 40 சதவீதம் அதற்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 527 வாக்காளர்களும் என மொத்தம் 1,283 வாக்காளர்கள், 96.திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 725 வாக்காளர்களும், 40 சதவீதம் அதற்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 434 வாக்காளர்களும் என மொத்தம் 1,159 வாக்காளர்கள், மற்றும் 87.சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 817 வாக்காளர்களும், 40 சதவீதம் அதற்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 406 வாக்காளர்களும் என மொத்தம் 1,223 வாக்காளர்கள் என மொத்தம் 85 வயதிற்கு மேற்பட்ட 4,113 வாக்காளர்கள், 40 சதவீதம் அதற்கு மேல் உடல் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிகள் 2,546 வாக்காளர்கள் என மொத்தம் 6,659 வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்த உள்ளார்கள்.

இன்று மற்றும் 6.4.2024 ஆகிய நாட்களில் வீடுகளுக்கே சென்று வாக்குபதிவு மேற்கொள்ளும் பணி நடைபெறும். விடுபட்ட வாக்களார்கள் வாக்களிக்க ஏதுவாக 8.4.2024 அன்று வாக்கு பதிவு மேற்கொள்ளப்படும்.

Tags

Read MoreRead Less
Next Story