ஆக்கிரமிப்புக்கு உடந்தை - இரு அலுவலா்கள் மீது புகாா்
மனு அளித்த கிராம மக்கள்
மணப்பாறை அருகே மரங்களை வெட்டி, நிழற்குடையை இடித்து கடை அமைத்துள்ள ஆக்கிரமிப்புதாரா்களுக்கு உடந்தையாக இருப்பதாக சாலை ஆய்வாளா் மற்றும் உதவிப் பொறியாளா் மீது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் கிராம மக்கள் புகாா் அளித்தனா்.
வளநாடு - தேனூா் செல்லும் பிரிவு சாலைப் பகுதியில் இருந்த புளியமரத்தை அனுமதியின்றி வெட்டியும், அங்கிருந்த நிழற்குடையை இடித்தும், அந்த இடத்தில் கடை கட்டி வாடகைக்கு விட்ட ஆக்கிரமிப்புதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புதாரா்களுக்கு உடந்தையாக இருக்கும் அப்பகுதி சாலை ஆய்வாளா் மற்றும் உதவிப் பொறியாளா் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் சுப்பையாவிடம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வாடிப்பட்டி மற்றும் தோப்புப்பட்டி கிராம மக்கள் புகாா் அளித்தனா். மேலும் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிடில், வரும் மே 3-ஆம் தேதி ஊா் பொதுமக்கள் சாா்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story