வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல், சுடுமண் கருப்பு நிற பதக்கம் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல், சுடுமண் கருப்பு நிற பதக்கம் கண்டெடுப்பு

சங்கு வளையல் மற்றும் சுடுமண்ணால் ஆன கருப்பு நிற பதக்கம் 

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சங்கு வளையல் மற்றும் சுடுமண்ணால் ஆன கருப்பு நிற பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்றுவருகிறது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடுமண்னால் ஆன கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு ஆகியவை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சங்கு வளையல் மற்றும் சுடுமண்ணால் ஆன கருப்பு நிற பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொன்மையான மனிதர்கள் பெண்களின் அணிகலனாக பதக்கத்தை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story