போக்சோ வழக்கு விசாரணைக்கு பயந்து கட்டிட தொழிலாளி தற்கொலை

போக்சோ வழக்கு விசாரணைக்கு பயந்து கட்டிட தொழிலாளி தற்கொலை

தற்கொலை

போக்சோ வழக்கு விசாரணைக்கு பயந்து கட்டிட தொழிலாளி தற்கொலை. சேலத்தில் பரிதாபம்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் வானக்காரன்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). கட்டிட தொழிலாளி. இவர் மீது 3 வயது சிறுமியை சில்மிஷம் செய்ததாக போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பழனிசாமி முன்ஜாமீனில் இருந்தார். இதற்கிடையே வழக்கு வருகிற 27-ந் தேதி விசாரணைக்கு வர இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பழனிசாமி வழக்கு விசாரணைக்கு பயந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags

Next Story