குறுக்கே வந்த மாடால் விபத்து - மாணவன் உயிரிழப்பு

X
சாலை விபத்து
தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆண்டனி நிதிஷ் (16). அதே பகுதியைச் சோ்ந்த வாசு மகன் அசோக் (20). நண்பா்களான இவா்கள், கடந்த 6ஆம் தேதி புளியம்பட்டியிலிருந்து வீட்டுக்கு பைக்கில் சென்றனா். பாளையங்கோட்டை சாலையில் உள்ள ராமச்சந்திரா விலக்குப் பகுதியில் மாடு குறுக்கே வந்ததாம். இதனால், பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, ஆண்டனி நிதிஷ் நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
