காஞ்சியில் தேரோடும் சாலை நெடுஞ்சாலை துறை சீரமைப்பு

காஞ்சியில் தேரோடும் சாலை நெடுஞ்சாலை துறை சீரமைப்பு

காஞ்சியில் தேரோடும் சாலை நெடுஞ்சாலை துறை சீரமைப்பு

காஞ்சிபுரத்தில் தேர் பவனி வரும் காந்தி சாலையில், குடிநீர் குழாய் சீரமைப்புக்காக மாநகராட்சியினர் பள்ளம் தோண்டிய இடம் சீரமைக்கும்பணி நடைப்பெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். இதில், மூன்றாம் நாள் உற்வசமான கருடசேவை உற்சவம், கடந்த 22ம் தேதி நடந்தது. அதேபோல, ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம் நாளை நடக்கிறது. இதையொட்டி தேரோட்டம் தடையின்றி நடக்கும் வகையில், சாலையோரத்தில் மின்தட பாதைக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர்.

சாலையில் இருந்த சாலை தடுப்புகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றப்பட்டு, சாலை நடுவில் இருந்த மணல் குவியல் அகற்றப்பட்டது. இந்நிலையில், தேர் பவனி வரும் காந்தி சாலையில், குடிநீர் குழாய் சீரமைப்புக்காக மாநகராட்சியினர் பள்ளம் தோண்டிய இடம் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதை அடுத்து இந்த சாலையினை நகராட்சி ஊழியர்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story