மோகனூரில் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் மார்கழி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி காப்பு கட்டி திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கரகம் பாலிக்கப்பட்டு கோவில் பூசாரி, வேல் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் பூங்கரத்துடனும், அக்னிசட்டி எடுத்தல் நிகழ்வும் மேலும் சிறப்பு நிகழ்வாக பண்ணாரி மாரியம்மன் வெண்கல பூவோடு அக்னிசட்டி பண்ணாரி பக்தர்களால் எடுக்கப்பட்டது. மோகனூர் காவிரியாற்றிலிருந்து பூங்கரத்துடன் பக்தர்கள் பல்வேறு வீதிகள் வழியாக மேளதாளத்துடன் திருக்கோவிலை அடைந்தடைந்ததும் கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செய்தனர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story