தர்மபுரம் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

தர்மபுரம் மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

 மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான மகமாரியம்மன் கோவிலில் 46 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான மகமாரியம்மன் கோவிலில் 46 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது.

:- மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலின் 46 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 2 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் விதிவிலக்காட்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வுகள் தீமிதி திருவிழாவான இன்று காவிரி கரையில் இருந்து மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 16 அடி நீளமுள்ள அலகு குத்தியும், வாய்பூட்டு காவடி எடுத்தும் சக்தி கரகத்துடன் பம்பை மேளம் உடுக்கை வாக்கியத்துடன் பச்சை காளி பவளகாளி சிவ தாண்டவ நடனத்துடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன. அதனை தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை அடுத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

சில பக்தர்கள் தீக்குழியில் நடந்து சென்றும், குழந்தைகளை தூக்கிக் கொண்டும் தீமிதித்தது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் இக்கோவில் வழக்கப்படி கரகமானது தீமிதி தொடங்கிய வைத்த போதும், தீமிதி முடிந்த பிறகும் இரண்டு முறை தீக்குழியில் இறங்கி தீ மிதித்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Next Story