இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

திமுக வேட்பாளர் மணி வாக்குசேகரிப்பு

அரசு கலைக்கல்லூரி அருகே இளைஞர்களுடன் விளயாடி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இந்தியா கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆ. மணி அரசு கலைக்கல்லூரி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

நேருநகர், கக்கஞ்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உதயசூரியனுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தஅவர், திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை எடுத்து கூறினார். அப்போது இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் வேட்பாளர் மணி வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் சன்முகம் தர்மபுரி மாவட்ட சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் இளைய சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story