அயலக தமிழர் நலவாரியம் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி !!

அயலக தமிழர் நலவாரியம் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி !!

நிகழ்ச்சி

லண்டன் மாநகரில் அயலக தமிழர் நலவாரியம் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

லண்டன் மாநகரில் அயலக தமிழர் நலவாரியம் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி லண்டனில் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலவாரியம் சார்பாக, சமூக ஆர்வலர் முருகேசன் தலைமையில் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. வினோத் பாஸ் வரவேற்றார்.

அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, வாரிய ஐரோப்பிய உறுப்பினர் முஹம்மது ஃபைசல் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் அவர்களின் சீரான வழிகாட்டலில் எப்படி எல்லாம் வாரியம் செயல்படுகிறது என்பதை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

ஆங்கிலேயர் மைக்கேல் ஜென்னிங்ஸ், கலைமாமணி திவ்யகஸ்தூரி, வழக்கறிஞர் பிரதாப் கிரி, வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோர் தமிழ் மாணவர்கள் மத்தியில் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்றும், பெண்ணியத்தின் கண்ணியம், தன்னிகரில்லா தமிழக முதல்வரின் ஆட்சியில் தலைத்தோங்கிய தமிழகம் என்ற தலைப்பில் முறையே உரையாற்றினார்கள்.

லண்டன் ஈஸ்ட்ஹாம் கவுன்சிலர்கள் லக்மினி ஷா, சூசான் மாஸ்டர், லூயிஸ் கோட்ஃப்ரி, ஆகியோர் கலந்து கொண்டு தமிழர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார்கள். குணா முத்துசாமி, பட்டுகோட்டை பிரேம் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags

Next Story