பழுதடைந்த பள்ளிக்கூட சுற்றுச்சுவரை சீரமைத்த திமுக நிர்வாகி

ஆ‌.பூச்சிபட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பழுதடைந்த சுற்றுச்சுவர்களை திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தனது சொந்த செலவில் சீரமைக்கிறார்.
உசிலம்பட்டி அருகே ஆ‌.பூச்சிபட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பழுதடைந்த சுற்றுச்சுவர்கள் மற்றும் கட்டங்களை திமுக செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இள மகிலன் செலவில் மராமத்து பணி செய்து வர்ணம் பூசி தலைவர்களின் உருவப்படங்களை வரையும் பணிகளை துவக்கி வைத்தார். உடன் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பழனி, மாலப்பட்டி கிளை செயலாளர் பாலமுருகன், ஒன்றிய துணைச் செயலாளர் முத்துசாமி,ஒன்றிய பிரதிநிதி கண்ணன், பூச்சிபட்டி கிளை செயலாளர் செல்வம், பூச்சிபட்டி ரமேஷ், வினோத்,ரமேஷ்,அஸ்வா,சூர்யா, கர்ணன்,மணி,உதயா,நவநீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story