முதல்வர் மாநாடு நடக்குமிடத்தில் திமுக நிர்வாகிகள் ஆய்வு

தர்மபுரியில் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் மாநாடு நடக்கும் மைதானத்தை கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
தருமபுரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து வாக்கு சேகரிக்க தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை வருகை தரவுள்ளார் பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தடங்கம் கிராமத்தில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணிகளை நேற்று மாலை ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட கழக செயலாளர்கள் முனைவர்பி.பழனியப்பன் M.Sc,Phd, தடங்கம் பி.சுப்பிரமணி Ex.MLA. ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story